சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அமித்ஷா இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். ஏற்கனவே துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று மாலை சென்னை வந்தார், அவரை தமிழக துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.