Advertisment

சிறுவனுக்கு  மிதிவண்டி பரிசளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்!

TN CHIEF MINISTER MKSTALIN GIFT HAS BEEN PROVIDED CHILDREN

கரோனா தடுப்பு பணிகளுக்காக, மதுரை மாவட்டம்ஆரப்பாளையத்தைச் சேர்ந்த சிறுவன் ஹரீஸ்வர்மன், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்தப் பணத்தை தமிழக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு வழங்கினார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் சிறுவனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment

Advertisment

அந்தவகையில் சிறுவன் ஹரீஸ்வர்மனுக்கு வாழ்த்துதெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சிறுவனுக்கு மிதிவண்டி ஒன்றைப் பரிசளித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஹரீஸ்வர்மன் என்ற சிறுவன் தனக்கு மிதிவண்டி வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் தொகையை கரோனா தடுப்பிற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய செய்தி கேட்டு நெகிழ்ந்தேன். இத்தகைய உணர்வே தமிழகத்தின் வலிமை! சிறுவனுக்கு மிதிவண்டி வாங்கிக் கொடுத்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

chief minister Tamilnadu TWEET
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe