bus depo

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அறிவிப்பு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை. சென்னை தேனாம்பேட்டையில் டிஎமெஸ் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் 20க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு, பணிக்கொடை பலன் உள்ளிட்ட பல கோரிக்கைகள் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

தொமுச, சிஐடியூ, எல்பிஎப், ஐஎண்டியூசி, தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த முத்தரப்பு தொழிர்சங்க பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.