சென்னை பாலவாக்கத்தில் இன்று (09.02.2023) தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் ‘சுவாசம்’ என்ற பெயரில் 10 லட்சம் மரக்கன்று நடும் விழாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.