Advertisment

ஏப்ரல் 9- ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 22 நாட்கள் நடத்த சபாநாயகர் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisment

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. அதில் மார்ச்- 9 ஆம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் துரைமுருகன், சக்கரபாணி, பிச்சாண்டி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

TN ASSEMVLY SECOND BUDGET SESSION DATE

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச்- 9 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

Advertisment

அதன்படி மார்ச்- 9 ஆம் தேதி எம்எல்ஏக்கள் காத்தவராயன், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்எல்ஏ ப.சந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மார்ச்- 11 ஆம் தேதி வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

மார்ச்- 12 ஆம் தேதி பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மார்ச்- 13 ஆம் தேதி எரிச்சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

அதேபோல் மார்ச்- 16 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்,ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது. மார்ச்- 17 ஆம் தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.

மார்ச்- 18 ஆம் தேதி பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை, மார்ச்- 19 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, மார்ச்- 20 ஆம் தேதி சட்டத்துறை, மார்ச்- 21ஆம் தேதி சமூக நலம், மார்ச்- 23 ஆம் தேதி வீட்டு வசதித்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

budget session tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe