Advertisment

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!

tn assembly opposition party leader decide admk mlas meeting

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற திமுக கூட்டணி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

Advertisment

tn assembly opposition party leader decide admk mlas meeting

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டும் 66 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், கடந்த மே 7ஆம் தேதி அன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்ட நிலையில், எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்தது.

Advertisment

tn assembly opposition party leader decide admk mlas meeting

இந்த நிலையில், இன்று (10/05/2021) காலை 09.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இந்தக் கூட்டம் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

tn assembly opposition party leader decide admk mlas meeting

தமிழக சட்டப்பேரவையின் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதை, சட்டப்பேரவையின் செயலாளருக்கு அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக எதிர்க்கட்சித் துணைத்தலைவர், அதிமுகவின் சட்டப்பேரவை கொறடா யார் என்பதை அதிமுக தலைமை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aiadmk

16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை (11/05/2021) காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். இவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இடையே போட்டி நிலவிய நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணியில் பாஜக 4 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (09/05/2021) தேர்வு செய்யப்பட்டார்.

opposition leaders tn assembly admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe