"தமிழ்நாட்டில் கரோனா காலத்திலும் நல்லாட்சி செய்து வருபவர் முதல்வர் பழனிசாமி" -அமைச்சர் தங்கமணி பாராட்டு!

tn assembly minister thangamani speech

சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டாவது நாளாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, "தமிழ்நாட்டில் கரோனா காலத்திலும் நல்லாட்சி செய்து வருபவர் முதல்வர் பழனிசாமி என பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், கரோனா காலத்தில் மக்களை பாதுகாப்பதுபோல் விவசாயிகளையும் பாதுகாத்து வருகிறார் முதல்வர் பழனிசாமி. திருத்தணி தொகுதியில் உள்ள மத்தூர் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு பரிசீலிக்கும். கொளத்தூர் தொகுதியின் நேர்மை நகரில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையம் உட்பட மின் பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். கொளத்தூர் கணேஷ் நகரில் 11 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

minister thangamani Speech tn assembly
இதையும் படியுங்கள்
Subscribe