Published on 08/05/2021 | Edited on 08/05/2021

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் மே 11ஆம் தேதி கூடுகிறது என்று தமிழக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், "16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் மே 11ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடக்கிறது. இதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பதவியேற்றுக் கொள்கின்றனர். தேர்தல் வெற்றி சான்றிதழைத் தவறாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்டு வர வேண்டும். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் மே 12ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்கிறது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.