Advertisment

'தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு'! - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

tn assembly election satyabrata sahoo tamilnadu chief election officer

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில்,முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்பு குறைவு. கூடுதல் வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறியும் பணிகள் நடந்து வருவதால், முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்பில்லை. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு உரிய காலத்தில்தான் தேர்தல் நடத்தப்படும். ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. 67 ஆயிரமாக உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்கள் அதிகரிக்கப்பட உள்ளதால் கூடுதல் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவுள்ளன. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ள’தாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிளக்கமளித்துள்ளார்.

Chief Election Officer Satyabrata Sahoo tn assembly election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe