tn assembly election results leading of the parties

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

தற்போது வரை, திமுககூட்டணி 68 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 45 சட்டமன்றத் தொகுதிகளிலும், அமமுககூட்டணி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

Advertisment

குறிப்பாக, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் உள்ளார்.

அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.