Skip to main content

பிபிஇ உடையணிந்து வாக்களித்த கரோனா நோயாளிகள்! (படங்கள்)

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06/04/2021) காலை 07.00 மணியளவில் தொடங்கிய நிலையில், அமைதியான முறையில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். இன்று இரவு 07.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், கடைசி ஒரு மணி நேரம் கரோனா நோயாளிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பிபிஇ (PPE) பாதுகாப்பு உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

 

அதன் தொடர்ச்சியாக, சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த கரோனா நோயாளிகள் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து வாக்களித்தனர். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்படுகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு தேடி வந்த வாக்கு இயந்திரம்; வாக்களித்த 111 வயது மூதாட்டி

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று(19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் கேரளாவில் மூதாட்டி ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக வாக்கு இயந்திரம் வீட்டுக்கே கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது வெள்ளிக் கோத்து கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் குப்பச்சி அம்மா(111 வயது) தள்ளாடும் வயதில் தன்னுடைய வாக்கைச் செலுத்த முடியாமல் குப்பச்சி அம்மா தவித்து வந்தார். இதனால் அவருடைய வாக்கைப் பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்கள் சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

அதன்படி காஞ்சங்காடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்காளராக உள்ள குப்பச்சி அம்மாவின் வீட்டுக்கே தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் தலைமையில் வீட்டுக்குள்ளேயே தற்காலிகமாக வாக்குச்சாவடி மையம் அமைத்து அவருடைய வாக்கை பதிவு செய்தனர். குப்பச்சி அம்மா தன்னுடைய வாக்கை பதிவு செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் இன்ப சேகரன் அவருக்கு மலர் கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கினார். 

Next Story

பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழப்பு; செவிலியர் பணிநீக்கம்

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

 lost their live of the patient during intercourse; Nurse layoffs

 

நோயாளியுடன் பாலியல் உறவில் இருந்தபோது நோயாளி உயிரிழந்து அதனால் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இங்கிலாந்தின் வேல்ஸில் நிகழ்ந்துள்ளது.

 

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸின் ரெஸ்க்ஸ்ஹாம் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் பெனலாப் வில்லியம்ஸ். 42 வயதான பெனலாப் வில்லியம்ஸ் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். மருத்துவமனையின் பின்புறத்தில் மருத்துவப் பணியாளர்கள் கார் நிறுத்தும் பகுதியில் அந்த நோயாளியுடன் அடிக்கடி காரில் பாலியல் உறவில் செவிலியர் ஈடுபட்டுள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அந்த நோயாளியுடன் காரில் செவிலியர் பாலியல் உறவில் இருந்த நேரத்தில் திடீரென நோயாளியின் இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு காரிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மருத்துவமனை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபொழுது காரில் ஆடையின்றி அரைநிர்வாணக் கோலத்தில் நோயாளி இறந்து கிடந்தார். நோயாளியுடனான இந்த தொடர்பு குறித்து செவிலியர் பெனலாப்பை அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் ஏற்கனவே எச்சரித்து வந்த நிலையில், அதையெல்லாம் அவர் அலட்சியப்படுத்தியுள்ளார். செவிலியர் பணிக்கு எதிராகவும், அதன் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.