tn assembly election 2021 election campaign video released

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநகர, பேரூர், ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

tn assembly election 2021 election campaign video released

Advertisment

இந்த கூட்டத்தில், டிசம்பர் 23- ஆம் தேதியில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். டிசம்பர் 23- ஆம் தேதி முதல் ஜனவரி 10- ஆம் தேதி வரை தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தி.மு.க.வினர் ஆன்லைன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளை தி.மு.க. அறிவுறுத்தியுள்ளது

இதனிடையே அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் பரப்புரை வீடியோ 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

Advertisment