2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.

tn assembly budget 2020 session meeting cm announced

நான்காவது நாளான இன்று (19/02/2020) விவாதத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் "ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24- ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்படும். பாலின விகிதங்களை சரிசமமாக கொண்டு வர முயற்சி மேற்கொள்ளும் மாவட்டங்களுக்கு சிறப்பு பரிசு. ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயதாகும் போது ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.

Advertisment

Advertisment

ஹஜ் பயணிகளுக்கு சென்னையில் ரூபாய் 15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களின் ஓய்வூதியத்தை ரூபாய் 1,500-ல் இருந்து ரூபாய் 3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லங்களில் குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோருக்கான தொகை ரூபாய் 2,000-ல் இருந்து 4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பராமரிப்பு நிலையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வயது, கல்விக்கு ஏற்ப அரசு பணிகளில் முன்னுரிமை" உள்ளிட்ட அறிவிப்புகள் முதல்வர் உரையில் இடம் பெற்றுள்ளது.