2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisment

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதல்வர், "விவசாயி என்ற முறையில் மசோதாவை தாக்கல் செய்வதில் பெருமை அடைகிறேன்" என்றார்.

Advertisment

tn assembly agriculture land protected zone bill introduced cm

புதிய மசோதா மூலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலத்தில் இடம் பெறுகிறது. அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி ஆகிய வட்டாரங்கள் இடம் பெறுகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் (அல்லது) திட்டங்களை பாதிக்காது. புதியதாக கொண்டு வரப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி டெல்டாவில் செயல்படுத்த முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 வகையான தொழில்களை மேற்கொள்ள முடியாது.

Advertisment

விவசாயிகள் நலனுக்காக சேவை செய்ய, பண்ணை உற்பத்தி திறனை அதிகரிக்க முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். பண்ணை நடவடிககையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், உயர்மட்டக் குழு ஆலோசனை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற அமைப்பில் துணை முதல்வர் உள்பட 30 பேர் இடம் பெறுவர் என்று சட்ட முன் வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.