/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/r4_1.jpg)
கரோனா நிவாரணம், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, மத்தியமாநில அரசுகளிடம் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள்மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு இன்று (ஜூலை 24)ஆர்ப்பாட்டம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கமாநில அமைப்பாளர் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாநில அரசுகள்,தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்களுக்கு இப்போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
- ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும், சென்னை உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களையும் தகுந்த பாதுகாப்புடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடனாக ரூ.3 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வழக்கறிஞர்களின் நலன் கருதி தெலுங்கானா அரசு ரூபாய் 25 கோடி,ஆந்திர அரசு ரூபாய் 15 கோடி என நிதி ஒதுக்கியதைப்போல் தமிழக அரசும், புதுச்சேரி அரசும் வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாதிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.15000/- வழங்கிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வழக்கறிஞர் குமாஸ்தாக்களுக்கு கரோனா கால நிவாரணமாக மாதம் ரூ.7500/- வழங்கிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழகம் மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, இளம் வழக்கறிஞர் உதவி நிதி மாதம் ரூ.3000வேண்டி விண்ணப்பிக்கும் உதவி தேவைப்படும் வழக்கறிஞர்களுக்கு எவ்விதி பாகுபாடின்றி மாதம் ரூ.3000/- வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பரமகுரு படுகொலையை 6 மாதத்திற்குள் விசாரித்து தண்டனையை உறுதிப்படுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
- வழக்கறிஞர்கள் பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/r5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/r3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/r4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/r2.jpg)