
சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் கடந்த 27 ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் குடியிருப்பிலிருந்த D பிளாக் கட்டடத்தில் 24 வீடுகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு உரிய உதவிகளைச் செய்யும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருவெற்றியூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீடுகளை இழந்த 17 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புக்கான ஆணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், ''மீதமுள்ள 11 குடும்பங்களும்ஏற்கனவே இருந்த இடத்தில் வீடுகள் வழங்க வேண்டும் எனக் கூறினர். மறுகட்டுமானம் வரை வாடகை காலத்திற்கான கருணைத் தொகை 24,000 வழங்கப்படும். மீதமுள்ள 308 குடும்பங்கள் படிப்படியாக காலி செய்து தந்தால் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்'' என அவர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)