திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் சார் பதிவாளர் பாலாஜியிடம் இருந்து ரொக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

திருவாரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பொதுமக்கள் தரப்பில் பேசப்பட்டே வந்தது. இந்நிலையில் நேற்றிரவு கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் திடீரென ஆய்வு செய்தனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் 10- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

tiruvarur resgistrar officer corruption  department raid

சோதனையின் முடிவில் சார் பதிவாளர் பாலாஜியிடம் இருந்து 22,500 ரூபாய் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.கடந்த வருடமும் இதே அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.