Skip to main content

திருவாரூர் லாரி ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் திரண்டுவந்து ஆட்சியரிடம் மனு

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் அரிசி ஆலைகளுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என மிரட்டி வரும் தனியார் முகவர்களை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் 300க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து நெல் அரவைகாக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தனியார் நவீன அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

 

 Tiruvarur lorry drivers, owners petition to collector

 

இந்நிலையில் தற்போது தனியார் அரிசி ஆலைகளுக்கு சொந்தமான லாரிகளில் மட்டுமே நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டுமென நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள், எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து 300 க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு அளித்தனர். 

இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒரு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.