Advertisment

தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் விளை நிலங்கள்...விவசாயிகள் கண்ணீர்!!

திருவாரூர் அருகே தண்ணீரின்றி 200 ஏக்கருக்கு மேலான சம்பா பயிர்கள் கருகும் அபாயத்தில் இருக்கிறது. உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

tiruvarur issue

டெல்டா மாவட்டங்களுல் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக

Advertisment

நடைபெற்றுள்ளது. அந்த வகையில் பின்னவாசல் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுவதும் தற்போது தண்ணிரின்றி நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அங்குள்ள விவசாயிகள் கூறுகையில்." இந்த பருவத்தில் மேட்டூர் அணை நான்குமுறை நிரம்பியதாலும், அடிக்கடி மழை பெய்துவந்ததையும் நம்பி, நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலம் சம்பா சாகுபடி பணிகளை கடன் வாங்கி ஈடுபட்டுள்ளோம். இந்த பகுதியில் முக்கிய பாசன ஆறு வெள்ளையாறு இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு ஆண்டு தோறும் சாகுபடி பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு சம்பா பருவத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீரை,பாசன வாய்க்கால்களுக்கு திறக்கப்படாததால் நேரிடையாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றும் இது குறித்து சம்பந்தபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாததால், பயிரிடப்பட்ட 200 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்து கருகும் நிலைக்கு வந்துவிட்டது.

இதனால் காலத்தில் உரங்கள் கூட தெளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காலத்தோடு பயிர்செய், உரம்போடுன்னு சொல்லுவாங்க, காலம் தவறிவிட்மால் பதறாகிடும், தமிழக அரசு உடனடியாக எங்கள் பகுதியில் கவனம் செலுத்தி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களையும் அதனை நம்பியுள்ள விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்." என கண்ணீரோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Farmers Tiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe