திருவாரூர் அருகே மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கு செய்ய முடியாத அவலநிலையில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

tiruvarur issue

Advertisment

திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் திருவாரூர் தஞ்சை இடையே இரு வழி சாலை அகலப்படுத்தும் பணிக்காக அங்கு வசித்து வந்தவர்களை சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டனர்.இதனை தொடர்ந்து தற்காலிகமாக அந்த கிராமத்திற்கு அருகே அம்மா நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஆறு வருடங்களாக வசித்து வருகின்றனர்.

Advertisment

இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர், சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கேட்டு ஆறுவருடங்களாகவே மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனாலும் அரசின் காதுகளுக்கு எட்டிடவில்லை. அங்கு வசிக்கும் மக்களுக்கு மின்சார வசதியோ, தெருவிளக்குகளோ இல்லாததால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் தொந்தரவால் அடிக்கடி குழந்தைகள், பெண்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.