அதிகாரி திட்டியதால், துப்புறவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி 

திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளியை ஆய்வாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

tiruvarur incident

திருவாரூர் நகராட்சி குடியிருப்பில் வசித்து வரும் மகேஷ்வரன் (30). இவருக்கு சுபா (27) என்ற மனைவியும், தமிழரசன் (7), கலை தமிழ் (5) இரு குழந்தைகள் உள்ளனர். மகேஷ்வரன் திருவாரூர் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பத்தாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பணிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டிற்கு வந்து யாருடனும் எதுவும் பேசாமல் படுத்துள்ளார். சந்தேகமடைந்த அவரது மனைவி சுபா (27) அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். மயங்கிய நிலையில் எழுந்து "தன்னை நகராட்சி ஆய்வாளர் ராமசந்திரன் என்பவர் தொடர்ந்து சில மாதங்களாகவே மிரட்டுகிறார், அவமானப்படுத்துகிறார், வேலைக்கு போன நாட்களிலும் விடுமுறை எடுத்தாக குறிப்பு எழுதுவதாக மிரட்டுகிறார்.

இன்று வேலைக்கு போனபோது என்னையும், குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துகிறார், அதனால் மனமுடைந்து விஷம் குடித்துவிட்டதாக" கூறிவுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மகேஷ்வரனை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தற்கொலை முயற்சி சம்பவம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

incident Tiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe