முன்பகை காரணமாக பார் உரிமையாளர் மோகன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் எரவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

tiruvarur incident

Advertisment

Advertisment

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே வயலூர் ஊராட்சிக்குட்பட்ட களப்பால்அகரத்தை சேர்ந்தவர் மோகன்(43). இவர் கொலை வழக்கு காரணமாக ஆயுள் தண்டனை காலம் முடிந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இவருக்கு இலக்கியா என்ற பெண்ணுடன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் எரவாஞ்சேரியிலிருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பரவக்கரை என்ற பகுதியில் அடையாளம் தெரியாத 5 மர்ம நபர்கள் காரில் வந்த மோகனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மோகன் பலியானார்.

tiruvarur incident

இதுகுறித்து தகவலறிந்த எரவாஞ்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆசீர்வாதம் என்பவரை கொலை செய்த விவகாரம் காரணமாக, அந்த கொலை நடந்திருப்பதாக தெரிகிறது. ஆசீர்வாதத்தின் மகன் அந்தோணிசாமி (39) மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 5 பேர் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டம் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.