Tiruvarur Dt Neetamangalam Athanur Mano Nirmalraj incident

திருவாரூர் மாவட்டம் களப்பா கிராமத்தில் கடந்த 9ஆம் தேதி மாரிமுத்து என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுவர் மனோ நிர்மல்ராஜ் என்பவர் ஆவார். இவர் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ரவுடி மனோ நிர்மல்ராஜை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றதுடன் காவலர் விக்னேஷை வெட்டிவிட்டுத் தப்ப முயன்றுள்ளார். அச்சமயத்தில் காவல் உதவி ஆய்வாளர் மனோ நிர்மல்ராஜியின் காலில் சுட்டுள்ளார். இந்த துப்பாகிச் சூட்டில் படுகாயம் பாய்ந்த ரவுடிமனோ நிர்மல்ராஜ் திருவாரூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ள மனோ நிர்மல்ராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் அவர் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலரை வெட்டிவிட்டுத் தப்பி ஓட முயன்ற ரவுடியை உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையயும் ஏற்படுத்தியுள்ளது.