Advertisment

இரு சக்கர வாகனத்தில் சென்ற  இளைஞரை விரட்டி சென்று சரமாரியாக வெட்டிய கும்பல்!

tiruvarur district youth incident police investigation

திருவாரூர் அருகே காட்டூர் அகரதிருநல்லூர் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 32). இவரது மனைவியின் வீடு கானூரில் உள்ளது. இவர் இன்று (14/11/2021) இருசக்கர வாகனத்தில் திருவாரூரிலிருந்து நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக கானூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

Advertisment

திருவாரூர் வாளவாய்க்கால் அருகே சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் லிப்ட் கேட்க, அந்த பெண்ணை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார். அவரை இரண்டு பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கிடாரங்கொண்டான் அருகே பைக்கை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

தகவலறிந்த திருவாரூர் தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகுமரேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன.

திருவாரூரில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது, பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

incident Police investigation Tiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe