Advertisment

கலைஞருக்கு திருவாரூர் மாவட்டமே கண்ணீர் சிந்தியது!

kalai

திருவாரூரில் கலைஞரின் மறைவையொட்டி அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைத்தி ஊர்வலம் சென்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி அவரது சொந்த மாவட்டமாக திருவாரூரில் அனைத்து பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒன்றிய பகுதியான கூடூரில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் ஊர்வலம் சென்று கலைஞர் திருவுரு படத்திற்கு மலர் மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

sdf

இதே போன்று திருவாரூர் அருகே மாவூர் கடைவீதியில் இருந்து விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அமைதி ஊர்வலம் சென்று தென்னவராயநல்லூரில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் திருவாரூர் அடுத்த இளவங்காரகுடி ஊராட்சியில் பல்வேறு கட்சியின் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பவித்திரமாணிக்கம் கடைவீதியில் உள்ள பொியார் சிலை அருகே கலைஞர் திருவுரு படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe