/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mannarkudi-acc-lorry-art.jpg)
இருவேறு விபத்துகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என 4 பேரும் திருவாரூர் சென்று தீபாவளிக்குப் புத்தாடை எடுத்துள்ளனர். அதன் பின்னர் இவர்கள் 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது மன்னார்குடி அருகே உள்ள வராதிமங்கலம் என்ற இடத்தில் இவர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சிவகுமாரும், அவரது 12 வயது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது மனைவியும், மற்றொரு மகளும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் மன்னார்குடி அருகே ஐவர் சமாதி என்ற இடத்தில் மோதியதில் மாரிமுத்து, ராஜா ராஜன் என்ற இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அதே சமயம் மன்னார்குடியில் திருவாரூர் நோக்கி ஜல்லியை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனம் லாரி மீதி மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் சம்பவ இடத்திலேயே மாரிமுத்து, ராஜா ராஜன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)