"திருவாரூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு"- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கநாளை (26/04/2020) ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

tiruvarur district collector announced sunday lockdown coronavirus prevention

அதன் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் சில இடங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்துள்ள முழுமையான ஊரடங்கு சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் நாளை (26/04/2020) காலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் நாளை (26/04/2020) ஒரு நாள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஞாயிற்றுக்கிழமை அன்று ஒருநாள் முழுமையான ஊரடங்கின் போது, மருத்துக்கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். ஊரக பகுதிகளில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://onelink.to/nknapp

திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 29 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ANNOUNCED District Collector lockdown Tiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe