style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக்தில் 23 மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் படிப்பது இந்திய ஒற்றுமையின் எடுத்துக்காட்டு
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறுமொழி, கலாச்சாரத்தை கொண்ட 23 மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்கள் பயில்வது இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டாகவிளங்குகிறது என இந்திய மாணவர் படையில் துணை இயக்குனர் கமாண்டோ விஜேஷ் கே கார்க் பெருமிததுடன் கூறினார்.
திருவாரூர் தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர்படை அமைப்பினர் துவக்கவிழா இன்றுநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய மாணவர் படையில் துணை இயக்குனர் இயக்குனர் கமாண்டோ விஜேஷ் கே கார்க் கலந்துகொண்டு இயக்கத்தை துவக்கிவைத்தார் .இதில் முதல் கட்டமாக 108 மாணவர்கள் தேசிய மாணவர் படையில் இணைந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிறகு தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் கமாண்டோ விஜேஷ் கே கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ஒற்றுமை மற்றும் ஒழுக்கமுமே தேசிய மாணவர் அமைப்பின் நோக்கமாகும்.திருவாரூர் மத்தியபல்கலைக்கழகத்தில் 23 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்பயில்கின்றனர். இவர்கள் பல்வேறு மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் சின்னஇந்தியா ஒற்றுமையுடன்இருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இவர்கள் தேசிய மாணவர் படை அமைப்பு மூலமாக ஒழுக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப்பெற்று நாளைய இந்தியாவின் சிறந்ததலைவர்களாக விளங்குவார்கள்.தமிழகத்தில் தேசியமாணவர் படை அமைப்பு மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சென்றஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில்தமிழகமே அதிக கோப்பைகளை வென்றது இந்த ஆண்டும் பாரத பிரதமர் அவர்களின்கையால் பரிசுகளை பெற தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.திருவாரூரில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தின் மூலம் கிராமப்புற மாணவர்களும் சாதிக்க முடியும் என்றார்.