Advertisment

திருவாரூர் ஆழித் தேரோட்டம்;ஊதுகுழல் விற்பனைக்குத் தடை

Tiruvarur Azhitherottam; Sale of blowpipes banned

ஆசியாவின் மிகப்பெரிய தேரானதிருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் 1ஆம்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. அதேபோல் தமிழக காவல்துறை சார்பில் சுமார் 1,700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

Advertisment

பக்தர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஆழித் தேரோட்டத்தை நடத்த தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆழித் தேரோட்டத்தை ஒட்டி அதிக ஒலி எழுப்பும் ஊதுகுழல்களை விற்கக் கூடாது என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பக்தர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊதுகுழல்களை விற்றாலோ அதைப் பயன்படுத்தி இடையூறு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

police Festival Thiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe