Advertisment

ஊராட்சி மன்ற தலைவரை அடித்து உதைத்த சாராய வியாபாரிகள்! பஞ்சாயத்து பேசும் காவல்துறை அதிகாரிகள்!!!

President

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் சாராயம், சாராய ஊறல்களை பிடித்து வழக்கு பதிவு செய்து வருகிறது காவல்துறை. கடந்த 45 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் அளவுக்கு சாராய ஊறல், சாராயத்தை கைப்பற்றி அழித்துள்ளது. 50க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளது. இப்படி சாராயத்துக்கு எதிராக காவல்துறையின் சிறப்பு படை போராடிவரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்கிற தகவல் காவல்துறைக்கு சென்றுள்ளது. அதனை தொடர்ந்து போலிஸ் அதிகாரிகள் வந்து சாராயம் காய்ச்சுபவர்களை பிடித்து சென்றுள்ளனர். பின்னர் சிறிய அளவில் வழக்கு போட்டு அவர்களை விடுவித்துள்ளார்கள். அப்படி வந்தவர்கள் மீண்டும் சாராயம் விற்பனை செய்துள்ளார்கள். இதுப்பற்றி மீண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிராமத்தில் இருந்தே தகவல் சென்றுள்ளது.

விளாப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நாகராஜ். 33 வயது இளைஞரான நாகராஜ், போளுர் காவல்நிலையத்தில் ஒரு புகார் தந்துள்ளார். அதில், கடந்த மே 7ந் தேதி மதியம் என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விளாப்பாக்கத்தை சேர்ந்த குமார், நான் சாராயம் காய்ச்சுவதை ஏன் போலிஸாரிடம் சொன்னாய் என திட்டினார். அதோடு வீட்டுக்கு சென்ற என்னை குமார், ரமேஷ், வேலு, பாலாஜி, சிவக்குமார், சிலம்பரசன், செந்தில்குமார், முருகன் போன்றவர்கள் கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களோடு என்னை பிடித்து என் கன்னத்தில் அடித்தனர். அடிதாங்காமல் நான் அவர்களை பிடித்து தள்ளிவிட்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கினேன். அப்போதும் என்னை விடாமல் வீட்டுக்குள் வந்து அடித்தவர்கள் வீட்டுக்குள் இருந்த டிவி, எனது இருசக்கர வாகனம், கண்ணாடி போன்றவற்றை உடைத்து போட்டுவிட்டு சென்றனர் என புகார் தந்துள்ளார்.

Advertisment

புகார் குறித்து நாகராஜ்யிடம் நாம் பேசியபோது, நான் தந்த புகார் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாராய விற்பனையாளர்கள், என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்கள். எனது வீட்டில் வயதான பெற்றோர் மட்டுமே உள்ளனர். அவர்களை மிரட்டுவதாக வந்த தகவலை தொடர்ந்து நான் வீட்டுக்கு சென்றபோது, சாராய வியபாரிகள், அவரது உறவினர்கள் என 15 பேர் என் வீட்டு முன் சுத்தி நின்றனர். அவர்கள் எங்களை தாக்க உருட்டு கட்டை, கத்தி, கொடுவா போன்ற ஆயுதங்களுடன் நின்றனர். நானும் வீட்டில் இருந்த ஒரு கொடுவாவுடன் என் பெற்றோருக்கு பாதுகாப்பாகவும், என்னை பாதுகாத்துக்கொள்ளவும் நின்றேன்.

எங்களை தாக்க முயல்கிறார்கள் என காவல்துறைக்கு தகவல் சொன்னேன். ஒரு எஸ்.ஐ வந்தார். அவர் முன்னாடியே என்னை போட்டு அடித்தார்கள். நான் போய் புகார் தருகிறேன், சாராய கும்பலும் வந்து புகார் தருகிறது. புகாரை வாங்கி வைத்துக்கொண்டு போளுர் காவல்நிலையத்தில் பேசி தீர்த்துக்குங்கன்னு சொல்றாங்க. அதுக்கு காரணம் சாராயம் காய்ச்சுபவர்களின் உறவினர் பெண்மணி ஒருவர் அதே காவல்நிலையத்தில் பணியாற்றுகிறார். அவர் மூலமாக தான் சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி நான் தகவல் சொன்னேன் என அவர்களிடம் சொல்ல என்னை தாக்கினார்கள்.

நான் இதுப்பற்றி போளுர் டி.எஸ்.பி குணசேகரன், எஸ்.பி சிபிசக்கரவர்த்தி போன்றவர்களிடம் நடந்ததை கூறியுள்ளேன். அதன்பின் இரண்டு தரப்பு மீதும் எப்.ஐ.ஆர் போட்டுள்ளார்கள். என் மச்சானை கைது செய்துள்ளார்கள், அந்த பக்கத்தில் ஒருவரை கைது செய்துள்ளார்கள் என்றார்.

காவல்துறைக்கு தகவல் சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது இப்படிப்பட்ட செயல்களால் தான். ரகசிய தகவல் தரும் பொதுமக்களை, சமூக ஆர்வலர்களை சமூக விரோத சக்திகளிடம் காட்டி தருவதோடு, அவர்களின் உயிருக்கே ஆபத்து என வரும்போதும் ஈகோ பார்த்தும், லஞ்ச பணத்தை பார்த்து செயல்படும் காவல்துறை அதிகாரிகள் இருப்பதால் தான் காவல்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்தும், விமர்சனத்துக்கு ஆளாகியும் வருகிறது.

panchayat polur President tiruvannamalai
இதையும் படியுங்கள்
Subscribe