/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sec-art.jpg)
தலைமைச் செயலகத்தில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரதுமனைவி தனலட்சுமி (வயது 60). இந்த மூதாட்டியின் நிலத்தை சில சமூக விரோதிகள் ஆக்கிரமித்து உள்ளனர். இது குறித்து பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால்இன்று (17.04.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துவிட்டு, தான் உடன் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யைஉடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தகாவல்துறையினர் மூதாட்டியின் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்றனர். மேலும் இவருடன் வந்திருந்த அவரது இரண்டு மகள்களையும் போலீசார் ஆட்டோவில் ஏற்றி B1 வடக்கு கடற்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனால் தலைமைச் செயலகம்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)