திருவண்ணாமலை மண்சரிவு சம்பவம்- 7 பேரின் உடல்களும் மீட்பு

 Tiruvannamalai Landslide Incident - 7 bodies recovered

திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று முன்தினம் (01.12.2024) இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. முதலாவதாக நேற்று மாலை மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடல் கௌதமன் (வயது 9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து உடல்கள் கண்டறியப்பட்டது. மொத்தம் 7 பேர் உள்ளே சிக்கியிருந்த நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. ஆனால் 7 ஆவது நபரான சிறுமியின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. கண்டெடுக்கப்பட்ட அனைவரின் உடலும் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்தே இறுதில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி 7 வது நபராக தேடப்பட்டு வந்த ரம்யா என்ற சிறுமியின் உடல் பல்வேறு போராட்டங்களுக்கு பின் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளே சிக்கியிருந்த 7 பேரின் உடல்களையும் மீட்கும் பணி இரண்டு நாட்களுக்குப் பின் முடிந்துள்ளது. கைப்பற்றப்பட்ட 7 பேரின் உடலும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

landslide rescued thiruvannaamalai
இதையும் படியுங்கள்
Subscribe