Skip to main content

தீபத்திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி... புறக்கணித்த அமைச்சர்.

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபம் திருவிழா உலக புகழ்பெற்றது. இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா டிசம்பர் 1- ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 10- ஆம் தேதி காலை கோயில் வளாகத்தில் பரணி தீபமும், மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.


தீபத்தினத்தன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கோயிலுக்குள் இருந்து வெளியே வரும் அர்த்தநாதீஸ்வரரை காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மகாதீபத்தன்று 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலமும் வருவார்கள்.

tiruvannamalai karhtikai deepam festival working start for today


இந்த தீபத்திருவிழாவை தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி செப்டம்பர் 30- ஆம் தேதி காலை 06.00 மணிக்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு  பந்தக்கால் நடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடந்த விழாவில் நகரத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளும் கலந்துக்கொண்டனர். பந்தக்கால் நடப்பட்ட பின்பே தீபத்திருவிழாவின் பணிகள் தொடங்கி, தேர்கள் சீரமைப்பு, கோயில்கள் சீரமைப்பு போன்ற பணிகள் தொடங்கும்.

tiruvannamalai karhtikai deepam festival working start for today


திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமல்ல, தென்னிந்தியாவின் முக்கிய திருவிழா திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவட்டத்தை சேர்ந்த சேவூர்.ராமச்சந்திரன் தான் தமிழக அறநிலையத்துறை அமைச்சராகவுள்ளார். இந்த விழாவில் அவர் கலந்துக்கொள்வதாக இருந்தது. ஆனால் வரவில்லை. சொந்த மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவின் பந்தக்கால் முகூர்த்த விழாவிலேயே கலந்துக்கொள்ளவில்லை என்பது அண்ணாமலையார் பக்தர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வருகை வந்ததால், அவரை வரவேற்க சென்னை சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றனர். 





 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.