/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/POWER 4434.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே முன் விரோதம் காரணமாக, மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்படவிருந்த தப்பிய நிலையில், கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரும், காப்பாற்றச் சென்ற வரும் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
சொரகொளத்தூரைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் இரும்பு கட்டிலில் படுத்திருந்தார். அங்கு சென்ற ஏழுமலை என்பவர் சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, உயரழுத்த மின்கம்பியில் கொக்கிப் போட்ட அவர், கட்டிலில் படுத்திருந்த சரண்ராஜ் உடல் மீது மின்சாரத்தைப் பாய்ச்சும் போது, சுதாரித்துக் கொண்டு சத்தம் போட்டு தப்பினார்.
ஆனால், சரண்ராஜைக் காப்பாற்ற ஓடி வந்த வேணுகோபால் என்பவர், மின் வயரை கையில் இருப்பது அறியாமல், ஏழுமலையைப் பிடித்துள்ளார். அப்போது, அவர் கையில் வைத்திருந்த மின்சார வயரில் இருந்து இருவர் உடல் மீதும் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காவல்துறையினர் விசாரணையில், முன்விரோதம் காரணமாக சரண்ராஜை ஏழுமலை கொலை செய்ய முயன்றதும், பின்னர் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)