Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், நிதியும் வேண்டும். - எம்.பி - மத்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு.

தொழில் வளர்ச்சி இல்லாத, விவசாயத்தில் வறட்சியை காணும், வேலைவாய்ப்பு குறைந்த மிகவும் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தில், அனைத்து துறைச் சார்ந்த பல்வேறு வளர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்கி சிறப்பு நிதி ஒதுக்கி தருமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமனை சந்தித்து திருவண்ணாமலை தொகுதி நாடாளமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கோரிக்கை கடிதம் தந்து அதுப்பற்றி அவரிடம் பேசினார்.

Advertisment

tiruvannamalai district needs special attention

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் அமைத்து தர வேண்டியும், விவசாயிகளுக்கு துணையாகவும், விவசாயத்தை மேம்படுத்தவும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும், வறட்சி பாதித்த திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூர் உட்பட 4 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் சாத்தனூர்அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும், தென்பெண்ணை ஆற்றுக் கால்வாயுடன் செட்டேரி அணைக்கு புதிய இணைப்பு கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கித்தர வேண்டும்.

மேலும் சாலை, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்கிற வகையில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு சிறப்பு நிதி மூலம் அதிகப்படியான நிதி ஒதுக்கித் தருமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனை திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சந்தித்து கோரிக்கை கடிதம் தந்துள்ளார்.

Nirmala Sitharaman tiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe