Advertisment

நான்கு உள்ளாட்சிப் பதவிகளுக்கு நாளை (08.01.2020) வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 27- ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30- ஆம் தேதியும் தேர்தல் நடந்தது.

Advertisment

tiruvannamalai district local body election votes counting again

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜனவரி 2- ஆம் தேதி தொடங்கிய நிலையில், மறுநாள் (03.01.2020) மாலை நிறைவடைந்தது.

Advertisment

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் வேட்பாளர்கள் பெயர் இல்லை என நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை நாளை (08.01.2020) நடைபெறவுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் எர்ணாமங்கலம், ஆணைபோகி ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதேபோல் செங்கம் ஒன்றியம் 19- வது வார்டு, மாவட்ட ஊராட்சி 26- வது வார்டுக்கும் நாளை (08.01.2020) நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VOTE COUNTING tiruvannamalai local body election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe