dmk

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியக் குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.வை சேர்ந்த அன்பரசி. இந்த ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலக (கிராமப்பிரிவு) இருப்பவர் அன்பழகன்.

Advertisment

இவர் மீது ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி, துணை தலைவர், தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியைச் சந்தித்து புகார் மனு ஒன்றினை தந்தனர். அதில், பி.டி.ஓ.வாக உள்ள அன்பழகன், ஒன்றியக் குழு தலைவரான என் கவனத்துக்கு எந்த அரசின் அறிவிப்பு, திட்டங்கள் தொடர்பானது உட்பட எதையும் கொண்டு வருவதில்லை. திட்டங்களுக்குப் பயனாளிகள் தேர்வு எப்படி நடக்கிறது என்பது குறித்து மன்றத்தில் அறிவிப்பதில்லை, திட்டப்பணிகள் குறித்தும் அறிவித்து, ஆலோசனை பெறுவதில்லை.

Advertisment

அதுமட்டுமில்லாமல் ஊராட்சிமன்ற பஞ்சாயத்துசெயலாளர்களை அவர் விருப்பத்துக்கு இடமாறுதல் செய்கிறார், இதுபற்றி ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கருத்து கேட்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் புகார் மனுவைத் தந்தனர்.