Skip to main content

அண்ணாமலையாரை தரிசிக்க அடையாள அட்டை கட்டாயம்... ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தரிசனத்திற்கு கட்டுப்பாடு!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

tiruvannamalai district, annamalaiyar temple peoples

 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயிலில் தரிசனம் செய்ய இன்று (19/09/2020) முதல் அடையாள அட்டை அவசியம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணம் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேபோல் அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் கண்டிப்பாக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசிக்கலாம் என்றும், சனிக்கிழமைகளில் 2 மணி நேரத்திற்கு 600 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை அடையாள அட்டையுடன் காண்பித்து குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யலாம் என கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் உள்ளூர் விடுமுறை

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Local holiday in Trichy

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி இடம்பெயர்ந்து முதல் சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு கோவில் அடைக்கப்பட்ட நிலையில் 1:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அலங்கரிக்கப்பட்ட சொர்க்கவாசலில் எழுந்தருளினார். விஐபி தரிசனம் மூலம் முக்கிய பிரமுகர்கள் ஏழுமலையானை வழிபட்டு தரிசித்து வருகின்றனர். காலை ஆறு மணி முதல் இலவச தரிசனம் மூலம் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருவதால், திருச்சியில் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Next Story

ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல்; 3 பாதுகாவலர்கள் கைது

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
trichy sri rangam temple issue

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இவர்கள் வரிசையை முந்திச் சென்று சாமி தரிசனம் செய்ய முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பிலிருந்த காவலர்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் சென்னா ராவ் என்ற ஐயப்ப பக்தருக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் அவர் அங்கேயே அமர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார். இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார், பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ் சார்பில் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று தன்னையும் ஐயப்ப பக்தர்கள் தாக்கியதாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த பரத் என்பவரும் புகார் கொடுத்தார். இரு தரப்பு புகார் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்தனர். அதோடு கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். கோயில் பணியாளர் தலைமுடியைப் பிடித்து உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்களைத் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கோயில் பாதுகாவலர்களான பாரத், செல்வகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.