Advertisment

புது மாதிரியான ஏடிஎம் கொள்ளை; கொள்ளையர்களை நெருங்கிய தனிப்படை

Tiruvannamalai ATM robbers will be caught in 3 days says IG Ganesan

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 70 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏடிஎம் கொள்ளையில் சிசிடிவி கேமராக்கள் எரித்து சிதைக்கப்பட்டதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் மாநிலம் கே.ஜி.எஃப்பில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம்மில் கொள்ளை கும்பல் ஒன்று கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும், அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும்திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு இரண்டு தனிப்படைகள் ஹரியானாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஜி கண்ணன், “ஏடிஎம் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்த நபர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிட்ட நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கண்காணிப்பு கேமாராக்களில் பதிவான காட்சிகளில் இருந்து சில தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அனைத்து வகை ஏடிஎம் இயந்திரங்களிலும்கொள்ளையர்கள் கைவரிசை காட்டவில்லை.குறிப்பிட்ட வகை இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக புதிய தொழில் நுணுக்கத்தில் இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இன்னும் 3 நாட்களில் பிடிபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Robbery police thiruvannamalai ATM
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe