Advertisment

அம்மா மேல மண்ணெண்ணய் ஊற்றி அப்பா தான் தீ வைத்தார்- இராணுவ வீரர் மகளின் புகார்!

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் 30 வயதான நாகேந்திரன். இவருக்கு கடந்த 2012- ஆம் ஆண்டு போளுர் அடுத்த மங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மூன்றாவது மகள் ரேணுகாவை திருமணம் செய்து கொண்டார். நாகேந்திரன், இராணுவத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு குஜராத் மாநிலத்தில் ராணுவ குடியிருப்பிலேயே வீடு ஒதுக்கப்பட்டுயிருந்தது. இதனால் திருமணம் ஆனதும் தனது மனைவியுடன் குஜராத் மாநிலத்திற்கு சென்று குடியேறினார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த 27- ஆம் தேதி வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து ரேணுகா உயிருக்கு போராடுவதாக ஏழுமலை குடும்பத்தாருக்கு, குடியிருப்பு வளாகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியான ஏழுமலை குடும்பத்தினர் உடனடியாக புறப்பட்டு குஜராத் சென்றுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு போய் பார்த்தபோது, சிகிச்சை பலனின்றி ரேணுகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Advertisment

TIRUVANNAMALAI ARMY GUJARAT INCIDENT

மண்ணெண்ணய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டாள் ரேணுகா என கணவர் நாகேந்திரன் ரேணுகாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். செய்தியை கேட்டு ரேணுகாவின் பெற்றோர் கதறி அழுதனர். பின்பு தனது மகளின் உடலை அங்கேயே அடக்கம் செய்துவிட்டு, தனது பேத்திகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார்கள்.

ஊருக்கு வந்த பின், தனது தாத்தா, பாட்டியிடம், அம்மாவை அப்பா தான் அடிச்சி மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்து எரிச்சார் என அழுதுக்கொண்டே சொல்லியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியாகி தனது பேத்தி யோகஸ்ரீயுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார். அதில் மேற்கண்டதை கூறி, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியே இப்படி கொலை செய்துவிட்டு, அதனை தற்கொலை என பொய் சொல்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து கலெக்டர் கந்தசாமி, அதனை காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தார். புகாரை பெற்றுக்கொண்ட அவர்கள், விசாரணை நடத்துவதாக கூறியுள்ளனர்.

Police investigation incident army tiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe