Temple land

Advertisment

திருவண்ணாமலை, ஆரணி நகரில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோயில் உட்பட 3 கோயிலுக்கு சொந்தமாக ஆரணி ஆற்றங்கரையோரம் 7 ஏக்கர் நிலம் உள்ளதாம். இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் பல ஆண்டுகளாக பயிர் செய்து வந்துள்ளார். அப்படி பயிர் செய்து வந்தவர் இந்த நிலம் எனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடியுள்ளார்.

இதுப்பற்றிய வழக்கு சம்மந்தப்பட்ட நபருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே சுமார் 15 ஆண்டுகாலமாக நடந்து வருகிறதாம். இந்நிலையில் ஜூலை 16ந் தேதி காலை, ஒரு கும்பல் ஜே.சி.பி., லாரி போன்ற இயந்திரங்களோடு சென்று அந்த இடத்தை சுத்தம் செய்தார்களாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளர். இதுப்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு தகவல் கூறியுள்ளனர்.

உடனடியாக அதிகாரிகள், அமைப்பினர் அந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அப்படி வந்தவர்களிடம், 27 லட்சத்துக்கு இந்த இடத்தை பயிர் செய்தவரிடமிருந்து முறைப்படி வாங்கிவிட்டேன் என ஆவணங்களை காட்டியுள்ளார்கள். இதில் அதிருப்தியான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் தந்துள்ளனர். போலிஸார் வந்து இடத்தை நிரவிக்கொண்டு இருந்தவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து இருதரப்பிடமும் உள்ள ஆவணங்களை பார்த்தவர்கள், வழக்கு முடியும் வரை இந்த இடத்தில் இருதரப்பும் நுழையக்கூடாது என தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தொகுதியில், அவரது ஊருக்கு மிக அருகில் உள்ள 7 ஏக்கர் கோயில் நிலத்தை தனி நபர் பெயரில் பட்டா செய்து அதனை விற்பனை செய்துள்ளது ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.