திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 34 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு 151 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் 18 ஒன்றியங்கள் உள்ளன. மொத்த ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் எண்ணிக்கை 341 இடங்களாகும். இதில் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதியுள்ள 338 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
அதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 6207. இதில் 1544 இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதியுள்ள இடங்களுக்கே தேர்தல் நடைபெறவுள்ளது.
3723 பேர் தாங்கள் செய்த வேட்புமனுக்களை திரும்ப பெற்ற நிலையில் மீதியுள்ள 16,593 பேர் தேர்தல் களத்தில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.