தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். மேலும் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலையும் அணிவித்து தீபாராதனை மற்றும் கற்பூரம் காண்பித்து பூஜைசெய்தார்.
ஏற்கனவே திருவள்ளுவருக்கு பாஜக தரப்பில் மத சின்னங்கள் அணிவித்து புகைப்படம் வெளியானதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து இதே திருவள்ளுவர் சிலை நேற்று முன்தினம் (04/11/2019) அவமரியாதை செய்யப்பட்டது. அவமரியாதை செய்த மர்ம நபர்களை பிடிக்க டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைத்து தமிழக காவல்துறை டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.