
கடந்த 21ஆம் தேதி திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் (56)நவல்பட்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்திய நிலையில், அவர்கள் நிறுத்தாமல் வேகமாக வாகனத்தை ஓட்டிச்சென்றனர். அவர்கள் ஆடுகளைத் திருடும் கும்பலைச் சேர்த்தவர்கள் என்பதனைத் தெரிந்துகொண்ட எஸ்.ஐ. பூமிநாதன், அவர்களை விரட்டிச் சென்றார். அ. திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்திய எஸ்.ஐ பூமிநாதன், அதிலிருந்த திருடர்களைப் பிடித்தார். ஆனால் அவரது பிடியிலிருந்து தப்ப முயன்ற அவர்கள், பூமிநாதனை அரிவாளால் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் நிதி திரட்டப்பட்டு5 லட்சத்து 50 ஆயிரத்து500 ரூபாய் நிதியினை இன்று (01.12.2021) பூமிநாதன் குடும்பத்தினருக்குத் திருவள்ளூர் காவல்துறையினர் வழங்கினர்.
Follow Us