
திருத்தணி அருகே பேருந்து - லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள கே.ஜி. கண்டிகை என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதே சமயம் எதிர்த் திசையில் திருத்தணி இருந்து லாரி ஒன்று சோழிங்கநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த அரசு பேருந்தும், லாரியும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அதிபயங்கரமாக மோதியுள்ளது.
இதனால் நேர்ந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பயணிகளை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.