Tiruvallur Dt Siruvapuri Balasubramanya Swamy temple incident

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மேலும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை போன்ற நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வாடிக்கை.

Advertisment

இந்நிலையில் கோவிலின் அருகே கோவிலுக்கு வந்த தம்பதியரை அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பெண் வியாபாரி ஒருவர் எட்டி எட்டி பக்தரைப் பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார். தொடர்ந்து அங்கு வந்த காவலர் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களை விலக்கி தம்பதியரை அப்புறப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.

Advertisment

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரை அப்பகுதி வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த பக்தருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன?. எதனால் இந்த சண்டை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.