/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvallur-car-art.jpg)
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் ஜெகன். திமுக பிரமுகரான இவரது வீட்டில் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் இவரது இரண்டு கார்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. அது மட்டுமின்றி சோழவரம் அருகே உள்ள சிறிலியம் என்ற கிராமத்தில் சரண் ராஜ் என்பவரது வீட்டிற்குள் புகுந்து இரண்டு கார்களின் கண்ணாடிகளையும் இந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.
மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லாரி யார்டு ஒன்றில் இந்த மர்ம நபர்கள் வெடிக்குண்டு வீசியுள்ளனர். அப்போது இந்த வெடிகுண்டு சத்தம் கேட்டு லாரி ஓட்டுநர் சிவா என்பவர் வெளியில் வந்ததுள்ளார். அப்போது மர்மநபர்கள் சிவாவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த சதிச் செயல்களை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்தார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் இந்த எதற்காக இந்த சம்பவங்களைச் செய்தார்கள் என்று கோணத்தில் போலீசார் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது சம்பவமும், ஒருவருக்கு ஏற்பட்ட அறிவாளர்கள் வெட்டு சம்பவமும், இரண்டு கார்கள் உடைக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)