Advertisment

‘காவல்துறை உங்கள் நண்பன்’ - எடுத்துக்காட்டாக விளங்கும் காவல் ஆய்வாளர்

Tiruttani police inspector is friendly with the public

காவல்துறை என்றாலே பொதுமக்களுக்கு ஒருவிதமான அச்சம் இன்றளவும் இருந்து வருகிறது. இன்னும் சிலர் புகார் கொடுப்பதற்கேஅச்சப்படும் நிலையிலும்இருந்து வருகின்றனர். ஆனால் இதற்குஎல்லாவற்றிற்கும் மாறாக, திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை திகழ்ந்து வருவதாகஅப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் ஆய்வாளர் ஏழுமலையின் அணுகுமுறை காவல்துறையின் உங்கள் நண்பன் என்பதைப் பிரதிபலிப்பதாகத்தெரிவிக்கின்றனர்.

Advertisment

Tiruttani police inspector is friendly with the public

கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான மூதாட்டி ஒருவர் திருத்தணி காவல்நிலையத்தில்ஆதரவின்றி தவிக்கும் என்னை பலர் தாக்க வருவதாகப் புகார் அளித்திருக்கிறார். இந்தப் புகாரைப்பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ஏழுமலை, இனி நீங்கள் யாரும் இல்லாத ஆதரவற்ற மூதாட்டி அல்ல. நீங்கள் எனது தாய் போன்றவர். ஆகவே இன்று முதல் உங்கள் மகனாக நான் நின்று உங்களுக்கு மாதம்தோறும் பராமரிப்புத்தொகையைத்தருகிறேன் என்று கூறி அவருக்கு இன்றுவரைமாதம்தோறும்ரூ. 1000 அளித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே கஞ்சா, மது போன்ற போதைப் பொருட்கள் விற்கும் நபர்களை அழைத்து போதைப்பொருள் விற்பனையை நிறுத்தவும், அதற்கு மாற்று வாழ்வாதாரமாக தானே காய்கறி கடையை வைத்துத்தருவதாகவும் கூறிஆய்வாளர் ஏழுமலை போதைப் பொருட்கள் ஒழிப்பு பிரச்சாரத்தையும்தொடங்கியிருக்கிறார். இப்படி ஆய்வாளர் ஏழுமலையின் செயல்பாடுகளுக்குத்திருத்தணி டிஎஸ்பி விக்னேஷின்ஒத்துழைப்பும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

public police thiruthani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe