Advertisment

திருப்பூரில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு!

Tirupur Pandian Nagar Karthik house incident

திருப்பூரில் நாட்டு வெடி குண்டுகள் வெடித்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பூரை அடுத்துள்ள பாண்டியன் நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஏராளமான நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வீட்டில் இன்று (08.10.2024) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு குழந்தை, ஒரு பெண் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 10 வீடுகள் சேதமடைந்தன.

Advertisment

இது தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த விபத்திற்கு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளே காரணம் எனத் தெரியவந்தது. அதோடு கார்த்திக் வீட்டில் இருந்த ஏராளமான நாட்டு வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர்.

incident police Tiruppur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe