Advertisment

நடிகர், நடிகைகள் புகைப்படங்களுடன் முக கவசம்... விற்பனை படு ஜோர்...

 mask

Advertisment

திருப்பூரில் புகைப்படங்களுடன் தயாரிக்கப்படும் முககவசங்களுக்கு அநியாய வரவேற்பு பெற்றுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ள முககவசங்கள் அணிய வேண்டும் என உலகமே எச்சரித்து மக்களுக்கு கவசத்தின் அவசியத்தை உணர்த்தி கொண்டிருக்கிறது.இந்த நிலையில் முக கவசங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் 24 மணி நேரமும் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மெடிக்கல் கடைகளில் மட்டுமே கிடைத்து வந்த முக கவசங்கள் தற்போது பெட்டிக்கடை முதல் அனைத்துகடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

போட்டி கடுமையாக இருப்பதால் திருப்பூரில் தற்போது திரைப்பட நடிகர்கள், நடிகைகளின் படங்களோடு முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு பெரிய வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

கெடக்கறது கெடக்கட்டும்... கெழவிய தூக்கி மனையில வை... என்கிற பழமொழிக்கு ஏற்றார் போல... புகைப்படங்களை முகக் கவசத்தில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். இது மக்களிடையே பெரும் வரவேற்பைபெற்றுள்ளதாக கொண்டாடுகிறார்கள் வியாபாரிகள்.

ஆனால் இது ஆபத்தானது. இதனால் சுவாசத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதுமட்டுமில்லாமல்சாலையில் எதிரெதிராக செல்பவர்களின் கவனம் சிதறும், விபத்துகள் நேரிடும். எனவே இந்த முககவசங்களை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

Actresses actors Mask tirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe